Primary Menu

கொடைக்கானல் சிறப்பு….?

கொடைக்கானல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி  ஆகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள்  என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலை செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன்  கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோவில்  என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.

22 சதுர கிலோமீட்டர்  பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது.

சங்ககாலத்தில்

சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. இது கொங்குநாட்டின் ஒரு பகுதி ஆகும். அப்போது அதனை ஆண்ட அரசன் கடியநெடுவெட்டவன்  இவர் கொங்கு வேட்டுவக்கவுண்டர் இனத்தை சார்ந்தவர் ஆவார். 
பண்ணி என்பவன் இந்த நாட்டைத் தாக்கி வென்று வேள்வி செய்தான் 

காலநிலை

கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி சென்டிகிரேடும், குறைந்த பட்ச வெப்ப நிலை 11.3 டிகிரி சென்டிகிரேடும் இருக்கும்.

வரலாறு

1821இல் லெப்டினன்ட் பி. ச. வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். 1845இல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,969 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 16,805 ஆண்கள், 16,164 பெண்கள் ஆவார்கள். கொடைக்கானல் மக்களின் சராசரி கல்வியறிவு 87.3% ஆகும். இது தேசிய கல்வியறிவு சராசரியைவிட மிகவும் அதிகமானது.

Leave a Reply

shares