Primary Menu

நத்தம்-துவரங்குறிச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு!!

நத்தம்-துவரங்குறிச்சி இடையே புதிதாக 4 வழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர், அந்த அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து உள்ளே இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ரமேசை சந்தித்து, தங்களது நிலத்தை கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்து தனித்தனியாக மனு கொடுத்தனர்.

Leave a Reply

shares